Sunday, May 15, 2011

யாழ்ப்பாணத்திலிருந்து திருக்கோவிலுக்கு அம்மன் சிலையைக் கடத்திச் சென்றவர் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து திருக்கோவில் பகுதிக்கு மேளவாத்தியத்திற்குள் வைத்து அம்மன் சிலையைக் கடத்திச் சென்ற ஒருவர் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டதுடன், அம்மன் சிலையும் மீட்கப்பட்டுள்ளதாகவும் திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஈ.பி.சமிந்த எதிரசூரிய தெரிவித்துள்ளார்.
திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத ஆலயத்தில் வைத்தே இவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்தோடு வெண்கலத்தினாலான ஒன்றரையடி உயர அம்மன் சிலையும் மீட்கப்பட்டுள்ளது.திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத ஆலயத்தில் மேள வாத்தியத்துடன் ஒருவர் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து வந்து தங்கியிருந்துள்ளார்.
ஆலயத்திலிருந்து வெளியே சென்ற இவரை நீண்டநேரம் காணாததையடுத்து புதன்கிழமை பகல் 2 மணியளவில் அவரின் மேளத்தை ஆலய நிருவாகிகள் தூக்கிப் பார்த்தபோது மேளம் பாரமாக இருந்ததையடுத்து சந்தேகம் கொண்டு பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளனர்.மேளத்தை பொலிஸார் சோதனையிட்ட போது அதனுள்ளிருந்து ஒன்றரையடி உயர வெண்கலத்தினாலான அம்மன் சிலையை மீட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரை கைது செய்து அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் நீதிபதி ரீ.சரவணராஜா முன்னிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Read more

Sunday, May 8, 2011

திருக்கோவில் பிரதேச மண்ணின் சாதனை மகிந்தன் சாண்டோ ரவியின் சாகசங்கள்..

News By :Parthipan.G.s
திருக்கோவிலில் கந்தசாமி மகோஸ்வரி தம்பதியருக்கு மகனாகபிறந்தவர். இவரது வயது 33 ஆகும்.தற்போது திருமணம் முடித்து பாடசாலைவீதி,வினாயகபுரம் - 04.இல் நிரந்தரமாக வசித்து வருகின்றார்.03 பிள்ளைகளின் தந்தை ஆவார் .இவர் ஓர் கூலித்தொழிலாளியாவார்.

18 வயது முதல் சாகசங்களை படைப்பதில் தன்னை இடுபடுத்திவருகின்றரர்.

முதன் முதலாக காலினால் தோங்காய் உரித்து அறிமுகமானரர்.பின்னர் உடம்பில் உழவு இயந்திரம் ஏற்றுவதில் திறமைசாலியானார்.பின்பு ஓடும் வாகனங்களை கைகளால் இழுத்து நிறுத்துவதில் வல்லவனானார்.அத்துடன் வயிற்றின் மேல் கருங் கல்லைவைத்து உடைத்து சாதனைபடைத்தார்.தற்போது முடியினாலும் தாடியினாலும் வாகனங்களை இழுப்பதற்கு பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றார்.

கடந்த 2004 ம் ஆண்டு ஏற்பட்ட சுணாமியினால் வீடு வளவும் மற்றும் சாதனைகள் படைத்து பெற்ற பரிசு கேடயங்கள் அனைத்தும் இழந்த வறிய நிலையில் இன்றும் உள்ளரர்.

இவரது இறுதி இலட்சியம் கின்னஸ் சாதனை படைப்பாதாகும். இதற்கு வழி அமைத்துதருமாறு திருக்கோவில் பிரதேச மக்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றார்.
--

இவரது வளர்ச்சிக்கும் முயற்சிக்கும் உதவி புரிய விரும்புவோர்.........
தொலைபேசி இலக்கம் :094 - 0770278238.
திருக்கோவில் மக்கள் வங்கி கணக்கு இலக்கம்:
0224 - 02 - 001 - 6 - 0015567

முகவரி : கந்தசாமி ரவி
பாடசாலைவீதி,
வினாயகபுரம் - 04
கிழக்கு மாகாணம்
இலங்கை.

  (போடோக்களை பெரிதாக பார்பதற்கு போட்டோ மீது கிளிக் பண்ணுங்கள் .)









Read more

Friday, May 6, 2011

கோட்ட மட்ட தமிழ் மொழித்தினப்போட்டி 2011- Photos

பொத்துவில் கோட்ட மட்ட தமிழ் மொழித்தினப்போட்டி 2011 
Tk /கோமாரி m.m.t.m.v  03.05.2011 அன்று இடம்பெற்றது . 

(போடோக்களை பெரிதாக பார்பதற்கு போட்டோ மீது கிளிக் செய்யுங்கள் )





Read more