Friday, April 29, 2011

தொழில்சார் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதற்கு புலமைப்பரிசில்

பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத வடக்கு,கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த இளைஞர்,யுவதிகளின் தொழில்சார் தொழில்நுட்ப அறிவினை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வொன்று சாய்ந்தமருது சீ.ஐ.எம்.எஸ்.

கெம்பஸ் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சீ.ஐ.எம்.எஸ்.கம்பஸின் பணிப்பாளர் நாயகம் அன்வர் எம்.முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யு.எஸ்.எயிட் நிறுவனப் பிரதி தரப்புகளின் தலைவர் பிரதீப் லியனமான பிரதம அதிதியாகவும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் கௌரவ அதிதியாகவும் யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் தொழில்படை அதிகாரி நேசராசா தம்பிராசா, தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி அனுசியா சேனாதிராசா,தென்கிழக்கு பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் ஏ.ஆர்.எம்.அன்சார் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.

பிராந்திய பொருளாதார இணைப்புத் திட்டத்தின் கீழ் இளைஞர்,யுவதிகளின் தேவைகளை அடையாளம் கண்டு அதற்கேற்ற வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு தரமான சான்றிதழுடன் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிறந்த தொழில்வாய்ப்பினைப் பெற்றுக்கொடுப்பதற்காக வழிகாட்டுதலுமே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

திருகோணமலை,மட்டக்களப்பு,நுவரெலியா, மொனராகல, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 100 இற்கும் அதிகமான மூவின இளைஞர், யுவதிகள் இப்பயிற்சி நெறிக்காகத் தெரிவு செய்யப்பட்டு புலமைப்பரிசில்களைப் பெற்றுக்கொண்டனர்.
Read more

மரண அறிவித்தல் அமரர் . வயிரமுத்து கந்தப்பன்

அமரர் . வயிரமுத்து கந்தப்பன் காலமானார்.

Read more

Wednesday, April 27, 2011

வயலுக்கு சென்றவரை வாகனம் மோதியதால் குடும்பஸ்தர் பலி . வாகனம் தப்பியோட்டம்

 News - Parthipan G.S 
 இன்று மாலை 6.40 மணியளவில் தாமரைக்குள சந்தி வீதியில் இனம் தெரியாத வாகனம் ஒன்று வயலுக்கு காவலுக்கு சென்று கொண்டிருந்த தங்கவேலாயுதபுரத்தை சேர்ந்த தங்கவடிவேல் என்பவரை அடித்ததில் அவர் உடன் மரணம் திருக்கோவில் வைத்தியசாலையில் உடல் வைக்கப்பட்டுள்ளது.வாகனம் தப்பியோடிவிட்டது..........

Read more

Sunday, April 24, 2011

ஸ்ரீ சத்திய சாய் பாபாஆத்மஜோதியில் கலப்பு: ஒரு சகாப்தம் முடிந்தது


உலகிலுள்ள பலகோடி பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படும் ஒரு வாழும் தெய்வமாகக் கருதப்படும் பகவான் சத்ய சாய் பாபா அவர்கள் இன்று காலை இந்திய நேரப்படி காலை 7.40க்கு இறையடியெய்தினார். 1926ம் ஆண்டு நவம்பர் 23ம் திகதி பிறந்த இவரது இயற்பெயர் சத்ய நாராயன ராஜூ ஆகும். இவரின் தாயார் ஈஸ்வரம்மாளுக்கும். தந்தையார் பெயர் ராஜூ ரட்னகரம் ஆகும். பகவான் சத்திய சாகி பாபா ஆர்கள் இளமைக் காலத்தில் இருந்தே ஒரு அதிசயக் குழந்தையாகத் திகழ்ந்ததாக அவரது தாயார் தெரிவித்திருந்தார்.

பாபா அவர்கள் 14 வயதாக இருக்கும்போது(1944) மார்ச் மாதம் 8ம் திகதி ஒரு சம்பவம் நடந்ததாக பதிவாகியுள்ளது. கொடிய விஷமுடைய கொடுக்கான் அவரைத் தீண்டியுள்ளது. பல மணிநேரமாக அவர் நினைவிழந்து இருந்திருக்கிறார். இனி மீண்டு எழ மாட்டார் என நாட்டுப்புற வைத்தியர்கள் தெரிவித்தவேளை, அவர் சில மணிநேரங்களில் எழுந்து பேச ஆரம்பித்ததாகச் சொல்லப்படுகிறது. அவர் எழுந்து பேச ஆரம்பித்த பாஷையைப் புரிந்துகொள்ள முடியாத மக்கள், தேள் கடித்ததால் அவருக்கு புத்தி பேதலித்ததாக நம்பினர். ஆனால் அவர் பேசிய பாஷை சமஸ்கிரதம் என்று பின்னர் அறியப்பட்டது. அவர் சமஸ்கிரதத்தை முன்னர் கற்றது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். அப்படி இருக்கும்போது அதை அவர் எவ்வாறு பேசினார் என மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.

இந்த நிலையில் 1940-ம் ஆண்டு மே 23-ந் தேதி சாய்பாபா வீட்டில் இருந்த அனைவரையும் அழைத்தார். திடீரென தனது கையில் இருந்து கற்கண்டை வரவழைத்து அவர்களுக்கு கொடுத்தார். அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். ஆனால் தந்தை ராஜு ரத்னகரம் கோபம் அடைந்து �ஏன் இப்படி மாய மந்திர வேலை செய்கிறாய்� என்று கூறி திட்டினார். அதற்கு சாய்பாபா நான் யார் தெரியுமா ? சீரடி சாய்பாபாவின் மறு பிறவி என்று கூறினார். அதன் மூலமே அவரை முதல் முதல் ஒரு தெய்வப்பிறவி என மக்கள் நம்ப ஆரம்பித்தனர்.

சீரடி என்னும் இடத்தில் 1838ம் ஆண்டு பிறந்தவர் சீரடி பாபா ஆவார். இவர் பல அற்புதங்களை நிகழ்த்தி மக்கள் குறைகளை நீக்கினார். சீரடியில் பல கோயில்கள் மடங்களை உருவாக்கிய சீரடி பாபா அவர்களை பல லச்சக்கணக்கான மக்கள் போற்றி வணங்கினர். மக்களின் குறைகளைத் தீர்த்த அவர், தீராத வியாதிகளையும், மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளையும் குணமாக்கினார். அவர் 1918ம் ஆண்டு தனது 80 வது வயதில் இறைபதம் எய்தினார். அதற்கு முன்னர் தாம் இறைபதம் எய்யவிருக்கும் நாளை அவர் மக்களுக்குச் சொன்னதோடு, இன்னுமோர் விடையத்தையும் தெரிவித்தார். அது தான் மறு பிறவியாகும். இந்துக்களால் நம்பப்படும் ஒரு விடையம் மறு பிறவியாகும்.

1918ம் ஆண்டு அவர் இறக்க முன் தான் மீண்டும் பிறந்து வருவேன் என்றும் அதிசயங்களை நிகழ்த்துவேன் என்று தெரிவித்திருந்தார். அதன் பின்னரே சத்திய சாகி பாபா அவர்கள் அவதரித்தார். புட்டப்பத்தி சென்ற அவர் 40துகளில் பல அற்புதங்களைப் புரிந்து சீரடி பாபாவின் மறு அவதாரம் தானே என மக்களுக்கு கூறினார். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா என உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் அவருக்கு பக்தர்கள் பெருகினார். வெளிநாட்டவரும் வேற்றின மக்களும் அவரை நாடி, நன்மைகளைப் பெற்றனர். பிள்ளையில்லாத பலர் பிள்ளை வரங்களையும், தீராத நோயால் பீடிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுதலையும், கண் பார்வை இழந்தோர் கண் பார்வையும் திரும்பப் பெற்றனர் எனச் சொல்லப்படுகிறது.

பல அற்புதங்களை நிகழ்த்தி, தெய்வீகக் குணம் கொண்ட பாபா மேல் சில விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது என்பதனை யாரும் மறுத்துவிட முடியாது. அவர் நிகழ்த்தும் அதிசயங்கள் சித்து விளையாட்டு அல்லது கண்கட்டு வித்தை என்று சிலரால் விமர்சிக்கப்படுகிறது. அவர் பாலியல்ரீதியாக தனை துண்புறுத்தியதாகவும் சிலர் புகார் கூறியுள்ளனர். அதனை பி.பி.சி போன்ற சர்வதேச தொலைக்காட்சியும் ஒளிபரப்பி இருந்தது. அவர்மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் இதுவரை நிரூபனமாகவில்லை என்பது அனைவரும் அறிந்த விடையம். மனிதன் எவ்வாறு கடவுள் ஆகலாம், ஒரு மனிதனை எவ்வாறு கடவுள் என நாம் கும்பிட முடியும் என பல பகுத்தறிவு வாதிகளும் நாத்திகர்களும் பாபாவை விமர்சிப்பது உண்டு. ஆனால் ஒரு மனிதனை நாம் ஏன் வணங்குகிறோம் என்று எழும் கேள்விகளுக்கு கீழே பதில்கள் உள்ளது.

குறிப்பாக சத்ய சாய் பாபா அவர்களுக்கு, வெளிநாட்டு பக்தர்கள் அதிகரித்ததால் அவர்கள் நன்கொடையாகக் கொடுக்கும் பணம் கோடிக்கணக்கில் சேர ஆரம்பித்தது. புட்டப்பத்தி என்னும் மிகவும் பின் தங்கிய கிராமத்தை அப் பணம் கொண்டு அவர் நவீன நகரமாக மாறினார். மலைகள் சூழ அடிவாரத்தில் இருந்த அக் குக்கிராமத்தை ஒரு நகரமாக்கிய பெருமை அவரையே சாரும். விமானநிலையம், மருத்துவக் கல்லூரி, இலவசப் படிப்பு, பாடசாலை, பல்கலைக்கழகம், இலவச மருத்துவமனை, இலவச இருதய அறுவை சிகிச்சை, என பல திட்டங்களை நிறைவேற்றினார் பாபா. பாபா இருதய அறுவை சிகிச்சை மருத்துவமனை, இதுவரை பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. அதுமட்டுமா, குடிக்கும் நீர் என்றால் அது ஒரு கனவு என்று நினைத்திருந்த கிராம மக்களுக்கு நீர் வசதி செய்துகொடுத்துள்ளார்.

ஆந்திரா அரசாங்கமே செய்ய பின்னடித்த காரியம் ஒன்றை எந்த எதிர்ப்பு வந்தாலும் பரவாயில்லை என அவரே முன் நின்று செய்து முடித்தார். பல கோடி ரூபாசெலவில், சுமார் 3500 கி.மீட்டர் நீளமான குழாய்களை அமைத்து, அதனூடாக நீரை எடுத்துவந்து வறண்ட பல கிராமங்களைச் செழிப்புறச் செய்தார். விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதா மக்கள், நீர் கிடைத்ததால் விவசாயம் செய்தனர். தமது வாழ்வாதாரத்தை வளப்படுத்தினர். சுமார் 5 லட்சம் மக்கள் பல குக்கிராமங்களில் இன்று விவசாயம் செவ்வது பாபாவின் நீர்பாசனத் திட்டத்தினால் என்பது யாவரும் அறிந்ததே. இத் திட்டம் தொடர்பாக பல சர்வதேச தொலைக்காட்சிகள், பாபாவை புகழ்ந்து பாராட்டியது.

வாயில் இருந்து லிங்கத்தை எடுப்பது, மண்ணை குங்குமமாக்குவது, என பல அதிசயங்களை அவர் செய்துகாட்டியதும், அதனை சில மனிதர்கள் ஏற்றுக்கொள்ளாமல் விமர்சிப்பதும் ஒரு பக்கம் இருக்கிறது. நாம் அதனை ஒரு பக்கமாகவே விட்டுவிடுவோம். லட்சக்கணக்கான மக்கள் உயிர்வாழ், லட்சக்கணக்கான மக்களுக்கு அவர்கள் நினைத்துப்பார்க்க முடியாத சத்திர சிகிச்சைகளை இலவசமாகச் செய்த, லட்சக்கணக்காம மாணவர்களுக்கு இலவசக் கல்வி கொடுத்து, லட்சக்கணக்காம மக்களுக்கு குடிக்கவும், விவசாயத்துக்கும் தண்ணீர் கொடுத்து அவர்கள் வாழ்வாதாரங்களை உயர்த்தி அவர்களை வாழவைத்த ஒரு நல்ல மனிதராகவே நான் பகவான் சத்ய சாய் பாபா அவர்களைப் பார்க்கிறேன் என்றால் மிகையாகாது.

பாபா புரிந்த அற்புதங்களை எவர் வேண்டும் என்றாலும், விமர்சிக்கலாம். ஆனால் அவர் புரிந்துள்ள மனிதநேயத் தொண்டையே இல்லை மனிதநேய உதவிகளையே எவராலும் மறுக்கவோ இல்லை விமர்சிக்கவோ முடியாது. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் என்றான் கவிஞன். அதனையே பாபா செய்திருக்கிறார் எனலாம். தனி ஒருவனுக்கு உணவில்லையேல் இந்த ஜெகத்தினை அழிப்போம் என்றான் புரட்சிக்கவி பாரதி . பாபா மக்களுக்கு உணவை வழங்கியதோடு நின்று விடாது, விவசாயத்தைச் செய்ய உதவியுள்ளார். லட்சக்கணக்கான மக்களுக்கு உதவி, வறுமையில் இருந்து எவன் ஒருவன் உயிர் காக்கிறானோ அவனே கடவுள் ! அப்படி என்றால் பாகவான் சத்ய சாய் பாபாவும் ஒரு கடவுள் தான் !

அவர் மீண்டு புண்ணிய பூமியில் பிறப்பார் என இந்துக்கள் நம்பியுள்ளனர். அதுவும் விரைவில் நடந்தேறும் சீரடி பாபா, பின்னர் சத்ய சாய் பாபா போல மறுபடியும் பாபா பிறப்பார் இதுவே இந்துக்களின் நம்பிக்கை
Read more

தம்பிலுவில் திருகோவிலில் சட்டவிரோத மின்சாரம் பெற்ற 32 பேர் கைது!

திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பாவித்த 32 பேரை இன்று அதிகாலை இலங்கை மின்சார சபையின் தலைமைக் காரியாலய விசேட குழுவினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருக்கோவில் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள விநாயகபுரம், தம்பிலுவில், தம்பட்டை திருக்கோவில் போன்ற பிரதேசங்ளை இன்று அதிகாலை 4 மணிக்கு பொலிஸாருடன் இணைந்து சுற்றி வளைத்து சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பாவித்த 32 பேரை கைது செய்ததுடன் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற வயர்கள் என்பன மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more

Saturday, April 23, 2011

ஈஸ்டர் திருநாள்-


துன்பம் நீங்கி இன்பம் வந்த ஒரு நாளாக கிறிஸ்தவர்கள் கொண்டாடும் 
ஈஸ்டர் திருநாள் 24 04 2011 அன்று ஞாயிற்றுக்கிழமை பெரும் மகிழ்ச்சியோடு 
கொண்டாடப்படுகின்றது.
அன்பையும்,கருணையையும் போதித்த இயேசு பெருமான்,தன் பகைவர்கள் 
தமக்கு இழைத்த கொடுமைகளையும் தாங்கி,வறிய மக்களுக்கும்,இயலாதவர்களுக்கும் 
கருணையுடனும்,அன்புடனும் தன் தேவனின் அருளுடன் பல காரியங்கள் செய்தார்.
பல அற்புதங்கள் செய்தார்.தமது பிரசங்கங்களினாலும்,செயல்பாடுகளினாலும் 
இந்த பூமிப் பந்திலுள்ள நலிந்த மக்களுக்கு உதவிட வேண்டுமென்ற உணர்வை தன்
சீடர்களுக்கும்,மற்றும் அனைவருக்கும் உபதேசம் செய்தார்.
"உங்கள் மேலங்கியை எடுத்துக்கொள்பவர்,உங்கள் எல்லா உடைகளையும் எடுத்துக்கொள்ள 
விரும்பினால் கொடுத்துவிடுங்கள்.உங்களிடம் கேட்கும் எவர்க்கும் கொடுங்கள்.உங்களின் 
பொருட்களை எடுத்துக்கொள்வோரிடமிருந்து அவற்றை திருப்பிக் கேட்காதீர்கள்.
திருப்பக் கிடைக்குமென எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள்"என்று போதித்தார்.
ஒருமுறை ஒரு நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்,ஏசுநாதரை விருந்துக்கு அழைத்தபோது 
அவரிடம்,"நீர் விருந்துக்கு யாரையும் அழைக்கும்போது உமது உறவினர்களையோ,
நண்பர்களையோ,அண்டைவீட்டார்களையோ அழைக்க வேண்டாம்.பதிலாக 
ஏழைகளையும்,ஊனமுள்ளவர்களையும்,பார்வை இல்லாதவர்களையும் அழையுங்கள்.
ஏனென்றால் இவர்கள் உமக்கு பிரதி விருந்து தர முடியாது.மற்றவர்கள் உமக்கு விருந்து 
வைப்பார்கள்.அது நீர் செய்ததற்கு பதிலாகிவிடுமே என்றார்."
ஏழை,எளிய,நலிந்த மக்களின் நலனுக்குக்காக பாடுபட்டு துன்பங்களை தாங்கிக் கொண்டு 
தொண்டு செய்திடும் மனப்பாங்கை சமுதாயத்தில் விதைத்தவர்.
மனித பாவங்களை சுமந்து சிலுவையிலே உயிர் விட்டு,மூன்று நாட்களின் பின்
உயிர்த்தெழுந்தவர்.இன்றும்,என்றும் பரிசுத்த ஆவியாக இருந்து அருள் புரிகின்றார்.
ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடும் அனைவரையும் எமது இணையத்தளம் 
வாழ்த்துகிறது.
Read more

Friday, April 22, 2011

ஊரில் இடம்பெற்ற சித்திரை புத்தாண்டு நிகழ்வு Photos & Videos

ஊரில் இடம்பெற்ற சித்திரை புத்தாண்டின் நிகழ்வுகளின் போடோஸ் மற்றும் வீடியோ ..








Read more

Tuesday, April 19, 2011

இரா .தெய்வராஜன்...எமது ஊரின் மகா மூத்த கலைஞன்...

ஒருகவிஞனாக,எழுத்தாளனாக,பாடலாசிரியனாக,இசையமைப்பாளனாக,கட்டுரையாளனாக, விமர்சகனாக, நகைச்சுவையோடுகூடியஒரு மேடைநடிகனாக என்று பல பரிமாணங்களைக் கொண்ட திரு.இராஜதுரை.தெய்வராஜன்,
திருக்கோவில்,தம்பிலுவிலுக்கு சொந்தக்காரன்தான்.எமது இரண்டு மண்களும் சேர்ந்த கலவையாகவே இந்த மகா கலைஞனை பார்க்கமுடிகிறதுதிருக்கோவில் மெதடிஸ்த மிசன் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர் தொடர்ந்து தம்பிலுவில் மகாவித்தியாலயத்தில் படித்து அறுபத்திரெண்டாம் ஆண்டு க.பொ.த(சாதாரணம்) பரீட்சையில் சித்தியடைந்தார்.பின்,அறுபத்திமூன்று, அறுபத்தினாலில்.கரடியனாறு
விவசாயப் பாடசாலையில் படித்துத் தேறினார்.அறுபத்தியைந்தில் கூட்டுறவு முகாமையாளராகினார்.
படிக்கும் காலத்தில் பாடசாலையில் இவர் நடித்த நாடகங்கள் மிகவும் பேசப்பட்டன. மறைந்த எம் மண்ணின் மற்றுமொரு மகா கலைஞன்
நகைச்சுவை மன்னன் திரு.ஆச்சரியம்,அமரர்.கவீந்திரன், மற்றும் கலைஞர்களுடன் இவர் சேர்ந்து பல நாடகங்களை நடித்திருக்கின்றார்.
சிலவேளைகளில் முன் ஆயத்தங்கள் இல்லாமலே,மேடைக்குப் பின்னால் நின்று பாத்திரங்களை உருவாக்கி,அதை மேடையில் நடித்து,
ஊர் மக்களின் பாராட்டுகளைப் பெற்ற நடிகர் இவர்."தம்பி கொழும்பில""புட்டுக்குழல்" அவள் வரமாட்டாள்"போன்ற நாடகங்கள் இவரின்
நகைச்சுவைக்கு கட்டியம் கூறுபவைகளாக அமைந்தன.
அறுபத்தியெட்டில் விசேச ஆசிரியர் நியமனம் கிடைத்தபின்பு ஒரு நல்ல ஆசிரியராக மாறி,எழுபதிலிருந்து-எழுபத்திரெண்டுவரை,
மட்/ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் பயிற்சிபெற்று பயிற்றப்பட்ட ஆசிரியனாக வந்தார்.இக்காலப்பகுதியில் மடக்களப்பில் இருந்த,
"ஜெயாலயா"இசைக்குழு,ஜீவன் இசைக்குழு,ஆகிய இசைக்குழுக்களில் முதன்மைப் பாடகனாகவும்,இசையமைப்பாளனாகவும்,தன்
திறமையை வெளிக்காட்டினார்.இக்காலக்கட்டத்திலேதான் இவரது மைத்துணர் திரு.கோவிலூர் செல்வராஜனுக்கும் இசையிலும்,
கலையிலும் ஆர்வத்தைக் கொடுத்து அவரை ஊக்குவித்து ,இன்று நாடறிந்த கலைஞனாக அவர் வருவதற்கு பெரும் பங்காற்றினார்.

கோவிலூர் செல்வராஜன் , பாடகி நித்யஸ்ரீ , மற்றும் தெய்வராஜன் அவர்கள்  


மறைந்த கவிஞர் திரு.எருவில் மூர்த்தி அவர்களின் பாடல்களை, இவரும்,கோவிலூரும் பாடி அவற்றை இலங்கை வானொலிவரைக்கும்
எடுத்துச் சென்றார்கள்.திரு.தெய்வராஜன் பாடிய "கொழும்புக்குப்போய் திரும்பி வந்த போடியார்" "தங்கச்சி தங்கச்சி தடம்புரண்டு போகாதே"
அண்ணாச்சிஅண்ணாச்சி ஐயோ இதென்ன கோலம் "போன்ற பொப் பாடல்கள் மட்டுநகர் பிரதேசம் முழுதும் மிகப் பிரபல்யம் வாய்ந்தனவாக
இருந்தன.மாமாங்கப்பிள்ளையார்,சித்தாண்டி முருகன்,திருக்கோவில் முருகன்,ஆகிய கோவில்களின் உற்சவகாலங்களில் இவருடைய
இசைக்குழுவின் நிகழ்ச்சி கட்டாயமாக இருக்கும்.

பயிற்றப்பட்ட வெளிவந்த பின்பு இவருக்கு ஹட்டன் ஹைலாட்ஸ் பாடசாலையில் நியமனம் கிடைத்தது.அங்கும் கலை,இலக்கிய
முயற்ச்சியில் முன்னணி வகித்தார்.பின்பு,எழுபத்தியாறில் மட்/அரசினர் கல்லூரியில் அதிபராகப் பொறுப்பேற்றார்.பின்பு மட்/மத்திய
கல்லூரியில் பணியாற்றினார்.இக்காலப் பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தன்னை வெளிவாரிப் பட்டதாரியாகப் பதிவு செய்துகொண்டு,பட்டப் படிப்பை மேற்கொண்டு எழுபத்தி எட்டில் ஒரு கலைப் பட்டதாரியாக ஆனார்.

ஒவ்வொரு பவுர்ணமிக்கும் மட்டுநகர் வாவியில் இவர்களின் இசைநிகழ்ச்சி நடக்கும்.இது மிக வரவேற்பை பெற்றது.
எண்பதில் ஒரு வருட விடுப்பு எடுத்துக்கொண்டு,சவூதி அரேபியாவுக்கும் தொழில் வாய்ப்பு பெற்று சென்று வந்தார்.
பின்பு நாடு திரும்பிய இவர் மட்/மகிழவெட்டுவான்,கன்னங்குடா ஆகிய மகாவித்தியாலயங்களில் கொத்தணி பேராசிரியராக
கடைமையாற்றி எண்பத்தியைந்தில் ஓய்வு பெற்றார்.பின்பு இவர் தமிழ் நாட்டுக்கு குடும்பத்துடன் புலம்பெயர்ந்தார்.
பல்கலைத் திறமைகொண்ட திரு.இரா.தெய்வராஜனும்,அவரது மைத்துணர் கோவிலூர் செல்வராஜனும் சேர்ந்து
எமது ஊர் பகுதிக் கோவில்களுக்காக பல பாடல்களைப் பாடி வெளியிட்டிருக்கின்றார்கள்.இவையெல்லாம் இன்று
எமது கோவில்களில் பாடப்படுகின்றன.இவற்றை நாம் எமது இணையத்தளத்திலும் சேர்த்திருக்கின்றோம்.தொடர்ந்து
இவர் பாடிய கும்மிப் பாடல்களும் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றன.அவற்றையும் நாங்கள் எமது தளத்தில்
சேர்த்து கொள்ளவிருக்கின்றோம் .
தமிழ் நாட்டில் இருந்து அடிக்கடி ஊர் வந்து போகும் திரு.தெய்வராஜன் எம் மக்களின் நலன் கருதி பல ஆக்கபூர்வமான
செயல்பாடுகளில் இனி இறங்க வேண்டுமென்று ஆசைப்படுகின்றார்.வளர்ந்துவரும் கலைஞர்களுக்கு ஆக்கமும்,
ஊக்கமும் கொடுக்கவேண்டுமென்றும் ஆர்வமாக இருக்கின்றார்.
ஒரு நல்ல பொதுநலவாதியாக,சமூகசேவகனாக,மனிதநேயனாக,எல்லோருக்கும் எப்பொழுதும் உதவக்கூடிய
ஒரு பெரும் குணம் கொண்ட பேராளனாக இருக்கும் திரு.தெய்வராஜனை,பல்லாண்டு வாழ்ந்து இன்னும் பல
கலைப் படைப்புகளை எம் மக்களுக்காக தரவேண்டும்மென்று எமது இணையத்தளத்தின் சார்பாக நாம்
வாழ்த்துகின்றோம்.
Read more

Monday, April 18, 2011

தம்பிலுவில் சத்திய சாயி நிலையத்தின் பௌர்ணமி விசேட பஜனை -video



தம்பிலுவில் சத்திய சாயி பாபா நிலைத்தில் 17.04.2010 அன்று  பௌர்ணமி விசேட பஜனை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இடம் பெற்றது.





Read more

Sunday, April 17, 2011

ஊரில் இடம்பெற்ற சித்திரை புத்தாண்டு நிகழ்வுகள் -Photos & Videos

இந்த வருடம் சித்திரை புத்தாண்டை ஊர் மக்கள் மிகவம் சிறப்பாக கொண்டாடினர் .   புதுவருட பிறப்பை முன்னிட்டு பல விளையாட்டு போட்டிகள் ,நிகழ்வுகள் மற்றும் சூரியன் இசைக்குழுவின் இன்னிசை கானமும்  இடம்பெற்றன .
 இந் நிகழ்வுகளின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் ..மற்றும் வீடியோ .

Read more

Saturday, April 16, 2011

"கல்கிதாசன் கவிதைகள் "நூல் வெளியீடு - Photos

BY - koviloor Selvarajan

எமது மண்ணின் மூத்த படைப்பாளிகளில் ஒருவரான திரு. எஸ்.பி கனகசபாபதி (கல்கிதாசன்)அவர்களின்
"கல்கிதாசன் கவிதைகள்" என்ற கவிதைத் தொகுப்பு நூல் கடந்த மாசி மாதம் இருபதாம் நாள்,ஞாயிறு அன்று,
தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. செல்வி.சிந்துஜா. கனகசபை அவர்களின்
தமிழ் வணக்கப் பாடலுடன் ஆரம்பமான இந்நிகழ்வுக்கு திருக்கோவில் பிரதேச செயலர் திரு.வி.அழகரெட்ணம்
அவர்கள் தலைமை தாங்கினார்.
வரவேற்பு உரையை,குருகுலம் முகாமைப்பணிப்பாளர் திரு.க.இராசரெத்தினம் அவர்கள் நிகழ்த்தினார்.
"செங்கதிர்"சஞ்சிகையின் ஆசிரியரும்,எழுத்தாளரும்,விமர்சகருமான திரு,ரி.கோபாலகிருஷ்ணன் அவர்கள்
நூலை அறிமுகம் செய்து வைத்து,பின்பு வெளியிட்டு வைத்தார்.
விநாயகபுரம் மகாவித்தியாலய அதிபர் திரு.கோ.பரஞ்சோதி,ஆசிரியை திருமதி.ஜெகதீஸ்வரி.நாதன்,
தாண்டியடி மகாவித்தியாலய ஆசிரியர் திரு, ஞா.விநாயகமூர்த்தி ஆகியோர் தங்களுக்கு உரிய பாணியில்
கவிதை நூலை ஆய்வு செய்தார்கள்.

தமிழ்நாடு,சென்னை மித்ர பதிப்பகத்தார் மிக கச்சிதமாக,கைக்கு அடக்கமாக, உயர் ரக அச்சுத் தாள்களில்
இந்த நூலை அழகாக வடிவமைத்திருக்கின்றார்கள்.
இக் கவிதை நூலுக்கு தமிழ் நாடு,பெருங் கவிக்கோ திரு.வா.மு.சேதுராமன் அவர்கள் வாழ்த்துப் பாக்களை
வழங்கியிருகின்றார்.திருக்கோவில் இரா.தெய்வராஜன் அவர்கள் மிக நேர்த்தியாக அணிந்துரை அளித்துள்ளார்.
எழுத்தாளர் திரு. நவம் அவர்கள் அருமையான வாழ்த்துரை வழங்கி இருக்கின்றார்.""இது பற்றியும்"
என்ற தலைப்பில், தனது நீண்டகால நண்பரும்,இலக்கிய சகாவுமான திரு.கனக்ஸ் பற்றியும்,அவரது
இலக்கிய தாகங்கள் குறித்தும் பதிவு செய்திருக்கின்றார் திரு.சிறீனோ சிறீ சிறீசு அவர்கள்.
தமிழ் நாட்டு ஓவியர் திரு.புகழேந்தி அவர்களும்,கனடா,சிறீனோ சிறீ சிறீசு அவர்களும் ஓவியங்களையும்,
படங்களையும் நூலின் ஒவ்வொரு பக்கத்திற்கும் மிகப் பொருத்தமாக கொடுத்து,நூலை அழகுபடுத்திஇருக்கிறார்கள்.

முப்பத்திமூன்று தமிழ் கவிதைகளும்,இரண்டு ஆங்கிலக் கவிதைகளையும் உள்ளடக்கிய இந்த நூல் .நூலாசிரியரின்,
பழைய,புதிய கவிதைகளை கொண்டதாக இருக்கின்றது.முதலில் இந்நூல் எமது ஊரில் வெளியிடபட்டாலும்
தொடர்ந்து இக் கவிதைநூல் லண்டனிலும்,கனடாவிலும் விரைவில் வெளியிடப்படும் என்று அறியமுடிகிறது.
எமது பகுதி படைப்பாளிகளை கௌரவப் படுத்தி வருகின்ற எமது இணையத்தளம்.திரு. கல்கிதாசன் அவர்களின்
இந்த முயற்சிக்குப் பாராட்டுவதுடன்,தொடர்ந்தும் அவர் நல்ல படைப்புகளை தர வேண்டும் என்று வாழ்த்துகிறது.
















Read more

Thursday, April 14, 2011

ஊரில் புதுவருட கொண்டாட்டம் - மாபெரும் விளையாட்டுப் போட்டியும் இன்னிசை கானமும்

By -Parthipan G.S
தமிழ் , சிங்கள புத்தாண்டை முன்னிட்டு
திருக்கோவில் பிரதேச பொது மக்களும், பொலிசாரும் இனணந்து நடாத்தும் விளையாட்டுப் போட்டியும்.சூரியன்
இசைக்குழுவின் இன்னிசை கானமும்.

காலம் : 2011 - 04 -16 ம் திகதி சனிக்கிழமை
[காலை 6 மணி தொடக்கம் நள்ளிரவு வரை]



இடம் : தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலய திறந்த வெளி அரங்கு

அனனவரையும் அன்புடன் அழைக்கின்றோம்






Read more

Wednesday, April 13, 2011

தாண்டியடி சங்கமன் கண்டிப் பிள்ளையார் உள் ஆலய சித்திரா பௌர்ணமி மகோற்சவ அலங்காரத் திருவிழா

By -S.Parthipan G.S 
ஆரம்பம் -2011 - 04 - 11          நிறைவு - 2011 - 04 - 18
சித்திரா பௌர்ணமித் தீர்த்தம் - 2011 - 04 - 17  [ஞாயிறு]





Read more

திருக்கோவில் காஞ்சிரங்குடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் பலி, 23 பேர் காயம் 3rd Update

News By - Parthipan G.S   திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடாவில் இன்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 6 பேர் பலியானதுடன் 23 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கன்ரர் ரக வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்ததால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
அம்பாறையிலிருந்து சிலர் மேற்படி கன்ரர் வாகனத்தில் உல்லே பகுதிக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி வரும் வழியிலேயே காஞ்சிரங்குடா சாகம வீதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
சாரதி திடீரென வாகனத்தின் பிறேக்கை அழுத்தியபோது அவ்வாகனம் சரிந்து விழுந்தது. இவ்வாகனத்தில் பயணம் செய்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.







Previous Update  ----------------------------------------------------------------------------------------------------------
இன்று மாலை 6.00 மணியளவில் காஞ்சிரங்குடா வீதியில் பாரிய வாகனவிபத்து இதில்  குழந்தை உட்பட நான்கு பேர் உடன் மரணம் பலரின் நிலமை மிக மோசமாகவுள்ளதுடன் கவலைக்கிடமாகவுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. 
இவர்கள் அம்பாறை ஹிந்குரனையை சேர்ந்தவர்கள்  உல்லை க்கு சென்று திரும்பி வரும் வழியில்  இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது 
காயட்பட்டவர்கள் தற்போது திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .    இன்னும் சிலர் எழுவேட்டுவான் வைத்திய சாலைக்கு அனுப்பபட்டுள்ளனர்
2nd Update  News By -Pathurjan
இவ் விபத்தினால் காயப்பட்டவர்களில் 3 பேரின் நிலை மிக மோசமாக உள்ளது . அதிகமானவர்களுக்கு முறிவுகள் ஏற்பட்டுள்ளன .    சம்பவத்தின் போது 25 பேர் வாகனத்தில் வந்துள்ளனர் . 
தற்போது 11 அம்புலன்ஸ் சேவைகளில் உள்ளது . 
மேலதிக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்
Read more

தாண்டியடி சங்கமன் கண்டிப் பிள்ளையார் உள் ஆலய சித்திரா பௌர்ணமி மகோற்சவ அலங்காரத் திருவிழா

Read more
Read more

Tuesday, April 12, 2011

புது வருடப் பிறப்புக் கருமங்கள் அறிவித்தல் - Notice

By-Parthipan G.S
பிறக்க இருக்கும் சித்திரை வருட பிறப்பு நேரம் , ராசிகளின் பலன்கள் , சித்திரை அன்று செய்ய வேண்டியவை பற்றி இவ் துண்டு பிரசுரத்தில் வெளியிடப்பட்டுள்ளது .  பார்வையிடவும் .

துண்டு பிரசுரத்தின் மேல் கிளிக் பண்ணி பெரிதாக்கி பாருங்கள் 

Read more