Friday, April 29, 2011

தொழில்சார் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதற்கு புலமைப்பரிசில்

பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத வடக்கு,கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த இளைஞர்,யுவதிகளின் தொழில்சார் தொழில்நுட்ப அறிவினை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வொன்று சாய்ந்தமருது சீ.ஐ.எம்.எஸ்.

கெம்பஸ் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சீ.ஐ.எம்.எஸ்.கம்பஸின் பணிப்பாளர் நாயகம் அன்வர் எம்.முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யு.எஸ்.எயிட் நிறுவனப் பிரதி தரப்புகளின் தலைவர் பிரதீப் லியனமான பிரதம அதிதியாகவும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் கௌரவ அதிதியாகவும் யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் தொழில்படை அதிகாரி நேசராசா தம்பிராசா, தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி அனுசியா சேனாதிராசா,தென்கிழக்கு பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் ஏ.ஆர்.எம்.அன்சார் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.

பிராந்திய பொருளாதார இணைப்புத் திட்டத்தின் கீழ் இளைஞர்,யுவதிகளின் தேவைகளை அடையாளம் கண்டு அதற்கேற்ற வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு தரமான சான்றிதழுடன் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிறந்த தொழில்வாய்ப்பினைப் பெற்றுக்கொடுப்பதற்காக வழிகாட்டுதலுமே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

திருகோணமலை,மட்டக்களப்பு,நுவரெலியா, மொனராகல, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 100 இற்கும் அதிகமான மூவின இளைஞர், யுவதிகள் இப்பயிற்சி நெறிக்காகத் தெரிவு செய்யப்பட்டு புலமைப்பரிசில்களைப் பெற்றுக்கொண்டனர்.

No comments:

Post a Comment